புரட்டாசி சனி முக்கியத்துவம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்து சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் அலை மோதும். நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட இரண்யனின் தங்கையே ஹோலிகா. இவளை பெண் என்பதால் நரசிம்மர் கொல்லவில்லை. இவள் தீயால் சுடப்படாத வரம் பெற்றவள். எனவே, இவளே தன் மேல் தீயை வைத்துக் கொண்டு, தனக்கு வேண்டாதவர்களை அழித்து விடுவாள். தன் அண்ணனைக் கொன்ற பெருமாள், கிருஷ்ணாவதாரம் எடுத்ததை அறிந்து, அவரைக் கொல்ல திட்டமிட்டாள். அப்போது, நாரதரின் அறிவுரையின் பேரில் சனீஸ்வரன், கண்ணனைப் பாதுகாக்க வந்தார். ஹோலிகா தாங்கும் வெப்பத்தை விட, சனீஸ்வரனின் பார்வை நெருப்புக்கு பலம் அதிகம். தன் பலத்தால், ஹோலிகாவையே எரித்து விட்டார். இந்த சம்பவம், ஒரு புரட்டாசி சனியன்று நடந்தது. தன் மீது அன்பு கொண்டு, தன்னைக் காத்த சனீஸ்வரனின் நாளையே, பெருமாள் தனக்குரிய நாளாக ஏற்றார். இதனால் தான் எல்லா சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் கூட்டம் அலை மோதுகிறது. சனிக்குரிய எள் தீபத்தை பெருமாள் கோவில்களில் ஏற்றும் வழக்கமும் இருக்கிறது. இந்நாளில் பெருமாளையும், சனீஸ்வரரையும் வணங்க துன்பங்கள் துõளென சிதறும்.