/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஆர்வத்துடன் பங்கேற்ற செஸ் வீரர்கள் | Chess competition | Tripur
ஆர்வத்துடன் பங்கேற்ற செஸ் வீரர்கள் | Chess competition | Tripur
திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன், லயன்ஸ் கிளப் ஆஃப் திருப்பூர் மற்றும் யங் அன்சர்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி தில்லைநகர் மணி பப்ளிக் அகாடமி பள்ளியில் நடைபெற்றது. போட்டியை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர். ஒன்பது, 12 மற்றும் 15 வயது பிரிவில் 129 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியை மாவட்ட சதுரங்க சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
அக் 06, 2024