உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியர் பங்கேற்பு | Coimbatore | Coco Game Competition

20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவியர் பங்கேற்பு | Coimbatore | Coco Game Competition

பள்ளிக்கல்வித்துறையின் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் செயின்ட் ஆன்ஸ் பள்ளி சார்பில் நேரு தொழில்நுட்ப கல்லுாரியில் நடைபெறுகிறது. மாணவியர் பிரிவு கோ கோ போட்டியில் 20 க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. 14 வயது பிரிவில் பி.எம்.ஜி பள்ளி முதலிடமும், குளோபல் பாத்வே பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன. 17 வயது பிரிவில் பி.எம்.ஜி பள்ளி முதலிடம், மலுமிச்சம்பட்டி அரசு பள்ளி அணி இரண்டாமிடம், 19 வயது பிரிவில் எல்ஜி பள்ளி அணி முதலிடமும், வெள்ளலுார் நிர்மலா மாதா பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை