உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வனத்தில் துள்ளிக்குதித்து ஓடிய கடமான்கள் | Deers release | VOC Park | covai

வனத்தில் துள்ளிக்குதித்து ஓடிய கடமான்கள் | Deers release | VOC Park | covai

கோவையில் உள்ள வ.உ.சி. வன உயிரியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்கா அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. அங்கு பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என சென்னை முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து பூங்காவில் இருக்கும் வன உயிரினங்களை வனத்திற்கு மாற்றம் செய்யும் பணியை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிருந்த புள்ளி மான்கள் வனத்திற்குள் விடுவிக்கபட்டன. தற்போது 5 கடமான்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறுவாணி வனம் போலம்பட்டி சரக காப்புக்காட்டில் விடப்பட்டது. விடுவிக்கப்பட்ட கடமான்கள் தீவனம் உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை