உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு | Coimbatore | Installation of CCTV Cameras

சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு | Coimbatore | Installation of CCTV Cameras

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் குடியிருப்பை சேர்ந்த 3 வயது சிறுமி வீட்டின் முன் விளையாடினாள். தேயிலை எஸ்டேட் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை சிறுமியை கவ்வி சென்று குடலை குதிறியது. சிறுமியை காணாமல் பெற்றோர் தேடும்போது வீட்டின் அருகே சிறுமி இறந்து கிடந்தாள். பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி வனத்துறை வழங்கும் 10 லட்சம் ரூபாயில் 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வேண்டும் என வனத்துறையினரை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஊசிமலை எஸ்டேட் பகுதியில் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் 20 க்கு மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அப்பகுதியில் ஆட்டோமேடிக் கேமராக்களை பொருத்தினர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், முற்புதர்கள் அகற்ற வேண்டும் என வனச்சரக்கரிடம் பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அக் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை