உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முதுமலை வனத்தில் விடப்பட்ட சிறுத்தை | Capture the Leopard by injecting anesthesia | Gudalur

முதுமலை வனத்தில் விடப்பட்ட சிறுத்தை | Capture the Leopard by injecting anesthesia | Gudalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை அருகே உள்ள செபாஸ்டின் வீட்டில் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு சிறுத்தை புகுந்தது. அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த இடும்பன் சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்தார். வீட்டிற்குள் இருந்த சிறுத்தை ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து இடும்பனை தாக்க முயன்றது. சுதாரித்து கொண்ட இடும்பன் வீட்டின் கதவை வெளிப்புரம் பூட்டி விட்டு உயிர் தப்பினார். சிறுத்தை ஆக்ரோஷமாக இருந்ததால் அதனை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. கூடலூர் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு தலைமையில் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் சிறுத்தையின் உடல்நிலையை ஆய்வு செய்தார். சனிக்கிழமை இரவு 8.15 மணிக்கு வீட்டின் கூரை மீது இருந்து சிறுத்தை உடலில் மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து, மயக்கம் அடைந்த சிறுத்தையை வன ஊழியர்கள் மீட்டனர். சிறுத்தையை கூண்டில் அடைத்து வாகனம் மூலம் முதுமலைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிறுத்தை உடலை ஆய்வு செய்தனர். சிறுத்தை நல்ல உடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு மசினகுடி சீகூர் வனச்சரகம் காங்கிரஸ் மட்டம் வனத்தில் சிறுத்தை விடுவிக்கப்பட்டது. சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மே 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி