போதைக்கு அடிமையான பிள்ளைகளை பெற்றோர் கண்டறிவது எப்படி? மனமே நலமா? பகுதி- 34 | Dr.Srinivasan
தற்போது போதை கலாசாரம் தமிழகம் எங்கும் பரவி உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நிலைமை உள்ளது. போதைப் பொருட்கள் பள்ளிக்கு அருகிலேயே கிடைக்கின்றன. ஆசிரியர்கள். பெற்றோரிடம் போதிய கட்டுப்பாடு இல்லாததால், மாணவர்கள் போதை பொருட்களை தயக்கமின்றி உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் மாணவர்கள் படிப்பில் நாட்டம் கொள்வதில்லை. பிள்ளைகள் போதைப் பழக்கம் கொண்டிருந்தால் அதை பெற்றோரே எளிதில் கண்டுபிடிக்கலாம். இரவில் துாக்கமின்மை, பகலில் அதிக நேரம் துாங்குவது, படிப்பில் மதிப்பெண் குறைதல், உற்சாகம் இல்லாமல் சோர்வாக இருப்பது என்பன போன்ற மாற்றங்கள் இருந்தால் அவர் போதை பழக்கம் உள்ளவர் என்று கண்டறியலாம். இதுதொடர்பாக ஆலோசனைகள் வழங்கினால் பிள்ளைகள் அதை தவிர்த்தால், உடனடியாக மனநல டாக்டரை அணுகுவது நல்லது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.