எஸ்.டி.பி.ஜ. கோவை நிர்வாகி ராஜிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
எஸ்.டி.பி.ஜ. கோவை நிர்வாகி ராஜிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை / Enforcement Department Inspection / SDPI Party / Mettuppalayam / Coimbatore கோவை மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோட்டைசேர்ந்தவர் ராஜிக். இரும்புக்கடை நடத்தி வருகிறார். எஸ்.டி.பி.ஜ. கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர். இவரது வீட்டிற்கு கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்புடன் வந்தனர். அவரது வீடு மற்றும் மேட்டுப்பாளையத்தில் பழக்கடை நடத்தி வரும் ரீலா ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தி வருகின்றனர். பல மணி நேரமாக நடக்கும் ரெய்டில் பணப் பரிவர்த்தனை தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறையின் திடீர் ரெய்டை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜிக் வீட்டை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.