சிலரின் தவறு | சிதைந்ததோ 'ஸ்ட்ரீட் லைப்ரரி'
கோவை மக்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோவை மாநகர போலீஸ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்ட்ரீட் லைப்ரரி என்ற திட்டம் ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி புத்தகங்கள் வைப்பதற்காக சிறிய அலமாரிகள் அங்கு அமைக்கப்பட்டன. ஆனால் அந்த அலமாரிகளில் தற்போது புத்தகங்கள் இல்லாமல் காலியாக உள்ளன. புத்தகங்கள் அனைத்தையும் யாரோ எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் புத்தகங்கள் வைக்கும் இடங்களில் பழைய துணிகளும், குப்பைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ரீட் லைப்ரரி திட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 டிச 26, 2024