சிசிடிவி காட்சியை பார்த்து எஸ்பி மகேஸ்வரன்அதிரடி உத்தரவு |Dharmapuri | Police action on CCTV footage
தருமபுரி அரசு ஆஸ்பிடல் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்ட எஸ் எஸ்ஐ காவேரி சாப்பிட்டிற்கான பணத்தில் பாதி கொடுத்து விட்டு மீது பணத்தை நாளை தருகிறேன் என சொல்லிவிட்டு சென்றாக கூறப்படுகிறது. கடந்த 2ம் தேதி சாப்பிட்டுவிட்டு பணத்தை நாளை தருவதாக கூறிய அவர் காலை வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பணத்தை நாளை தருகிறேன் என கூறியுள்ளார். கடை உரிமையாளர் முத்தமிழ் 2ம் தேதி சாப்பிட்டதற்கும் தற்போது சாப்பிட்டதற்கும் சேர்த்து பணத்தை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த SSI காவேரி முத்தமிழை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு பணத்தை தூக்கி வீசி எறிந்து விட்ட காலில் தான் அணிந்திருந்த ஷூவை கழட்டி அடிக்க பாய்ந்தார். இந்த சம்பவம் ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இது குறி்த்து தகவல் அறிந்த எஸ்பி மகேஸ்வரன் SSI காவேரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.