உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / தினமும் 2 லட்சம் முருக பக்தர்களுக்கு தடபுடல் விருந்து | Muthamil Murugan Conference | Palani

தினமும் 2 லட்சம் முருக பக்தர்களுக்கு தடபுடல் விருந்து | Muthamil Murugan Conference | Palani

முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநியில் உள்ள பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று கோலாகலமாக துவங்கியது. இரண்டாம் நாள் மற்றும் நிறைவு மாநாட்டையொட்டி பக்தர்களுக்கு தலை வாழை இலை போட்டு தடபுடல் விருந்து பரிமாறப்பட்டது. காலையில் நெய் ரவா கேசரி, பூரி, பூரி கிழங்கு குருமா, இட்லி, வெண் பொங்கல், தேங்காய் சட்னி, முருங்கைக்காய் பருப்பு சாம்பார் வழங்கப்பட்டது. மதியம், தலை வாழை இலையில் வெஜிடபிள் பிரியாணி, சூடான சாதம், சுவையான கோதுமை அல்வா, முருங்கைக்காய், கத்தரிக்காய், பருப்பு சாம்பார், பொறியல், அவியல், அப்பளம், வடகம், மோர்வத்தல், நார்த்தங்காய் ஊறுகாய், பருப்புப் பால் பாயசம், தயிர் வழங்கப்பட்டது. இரவு, இட்லி, ஊத்தப்பம், வெண் பொங்கல், வடை, தயிர் சாதம், சாம்பார் சாதம் உள்ளிட்டவை பாக்கு தட்டில் வைத்து பரிமாறப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாருக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இரண்டு நாள் மாநாட்டில் தினமும் மூன்று வேளைக்கும் சேர்த்து 2 லட்சம் பேருக்கு தரமான, சுவையான, சுகாதாரமான சைவ உணவு வழங்கப்பட்டது. இதற்காக முன்னணி சமையல் மாஸ்டர்கள் 700 பேர் அமர்த்தப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் பஞ்சாமிர்தம், கற்கண்டு, முருகன் புராண வரலாறு புத்தகம், ஜவ்வாது விபூதி, தாழம்பூ குங்கும் அடங்கிய பிரசாதப்பை இலவசமாக வழங்கப்பட்டது. மாநாடு இன்று முடிந்தாலும் கண்காட்சி அரங்குகளை பார்வையிட வசதியணாக ஆகஸ்ட் 30ம் தேதி வரை அரங்குகள் திறந்திருக்கும்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி