கூடுதல் பணிச்சுமை நீக்கி பி.ஃஎப் வழங்க கோரிக்கை| Bonded labourers protest| karur
கூடுதல் பணிச்சுமை நீக்கி பி.ஃஎப் வழங்க கோரிக்கை/ Bonded labourers protest/ karur கரூர் அரசு ஹாஸ்பிடலில் ஸ்மித் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை நிர்வாகிக்கும் பொறுப்பேற்றுள்ளது. பணியாளர்கள் இன்று முதல் தினமும் 9 மணி நேரம் சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் அரசு ஹாஸ்பிடல் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக பணிச்சுமையை நீக்கி, கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்தனர். சம்பளம் பிடித்தம், இ.எஸ்.ஐ - பி.ஃஎப் நிறுத்தி வைத்ததைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஸ்பாட்டிற்கு விரைந்த பசுபதிபாளையம் போலீசார் மற்றும் ஸ்மித் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எட்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் என உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.