/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ போதை பிடியிலிருந்து இளைஞர்கள் விலகி இருக்க விழிப்புணர்வு| horse radish siezed| Kodaikanal
போதை பிடியிலிருந்து இளைஞர்கள் விலகி இருக்க விழிப்புணர்வு| horse radish siezed| Kodaikanal
கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குதிரை தாலி கிழங்குகளை விற்பனை செய்துள்ளார். சுற்றுலா சென்ற கேரள இளைஞர்களிடம் இந்த கிழங்கை நசுக்கி துணியில் வைத்து முகர்ந்து பார்க்க செய்தார் ராஜா முகர்ந்த உடனே போதை தலைக்கு ஏறுவதாக அந்த இளைஞர்கள் சோசியல் மீடியாவில் வீடியோவை பகிர்ந்தனர். இந்த வீடியோவை பார்த்து பல போதை ஆசாமிகள் மேகமலை நோக்கி படையெடுக்க துவங்கினர். இந்நிலையில் ஸ்பாட்டிற்கு சென்ற மதுவிலக்கு போலீசார் கிழங்கை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற செய்திகளை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.
ஜன 09, 2025