உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் கிட்னி நோயாளிகள் வேதனை

தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் கிட்னி நோயாளிகள் வேதனை

தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் கிட்னி நோயாளிகள் வேதனை / Kidney Disorder / 7,000 people are fighting for their lives / TN தமிழக அரசு ஹாஸ்பிடல்களில் கிட்னி பெயிலியர் காரணமாக ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் மரணத்தோடு போராடி வருகின்றனர். ரத்த சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் மூலம் கிட்னி ட்ரான்ஸ்பளான்ட் செய்யவும் வழியில்லாமல் பரிதவித்து வருகின்றனர். கிட்னி மட்டுமல்லாமல் கல்லீரல், இருதயம், கண் உள்ளிட்ட உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாகவும் மாற்று உடல் உறுப்புக்கள் கிடைக்காமல் பல ஆயிரம் பேர் அரசு ஹாஸ்பிடல்களில் பரிதவித்து வருகின்றனர். இவர்களுக்கு உடல் உறுப்பு தானமாக தருபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஒரே தீர்வு, விபத்துக்களில் மூளைச்சாவு அடைவோர் மற்றும் இறந்த பின் உடல் உறுப்புக்களை உறவினர் ஒப்புதலுடன் தானம் பெறுவர்கள் மூலம் உயிருடன் மரணப் போராட்டம் நடத்துவோரை காப்பாற்ற இயலும். தமிழகத்தில் உடல் உறுப்புகள் வேண்டி பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவிலேயே அதிகளவில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வினோத் வயது 24. கல்லூரி மாணவர். இவருக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என ஆசை. அதற்கான தேர்வுக்கு தயராகி வந்தார். கடந்த ஏப்ரலில் நடந்த பைக் விபத்தில் வினோத் படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த ஏப்ரல் 16 ம் தேதி இறந்தார். அவரின் பெற்றோர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகளான கண்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானம் பெறப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்வோருக்கான அரசு மரியாதையுடன் வினோத் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 24 வயதில் இறந்த வினோத் தனது உடல் உறுப்பு தானம் மூலம் உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். இன்று உடல் உறுப்பு தான தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ