உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / புயலை கிளப்பிய ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான்

புயலை கிளப்பிய ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான்

புயலை கிளப்பிய ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான் / Criminal case against Madurai Aatheenam / Vishwalinga Thambiran who created a storm / Madurai மதுரை ஆதீனம் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ஆதீன மட விவகாரங்களில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும் என மதுரை ஆதீன மட விவகாரம் குறித்து மதுரை ஆதீன மடத்தின் ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான் கலெக்டரை சந்தித்து மனு அளித்தார். மதுரை கலெக்டர் ஆபீஸில் ஸ்ரீமத் விஸ்வலிங்க தம்பிரான் செய்தியாளர்களை சந்தித்தார். மதுரை ஆதின மடத்தின் அடுத்த வாரிசாக என்னை 292-வது குரு மகா சன்னிதான நியமித்துள்ளார். ஆனால் தற்போதைய மதுரை ஆதீனம் மற்றொரு நபரை வாரிசாக நியமிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மதுரை ஆதீனம் மடத்தில் ஐந்தரை ஆண்டுகளாக தம்பிரானாக பணியாற்றி நிர்வாக பொறுப்புகளை கவனித்துள்ளேன். தற்போதைய ஆதினத்திற்கும், எனக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதால் சில காலங்கள் வெளியிலிருந்து பணியாற்றுகிறேன். ஆதினங்கள் ஒன்று சேர்ந்து என்னை மதுரை ஆதீனம் மடத்தின் அடுத்த வாரிசாக என்னை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது, என்றார்.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை