போஸ்டர் நகரமாக மாறுது தூங்கா நகரம் | Madurai Corporation | Poster Issue
வளைச்சு வளைச்சு ஒட்டுராங்க போஸ்டர்! அழகு மதுரை இப்போ அலங்கோல மதுரை மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் உண்டு. ஆனால் அது இப்போ போஸ்டர் நகரம் என சொல்லும் அளவிற்கு எங்கு திரும்பினாலும் போஸ்டர் மயம் தான். பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது, அச்சுப்பதிப்பது சட்டப்படி குற்றம். மீறுவோர் மீது உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவற்றை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அரசியல் கட்சிகள், சினிமா போஸ்டர்கள், கட் அவுட், பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள், சாலை தடுப்புகள், பாலங்கள் என ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் கிடைக்கும் இடங்கள் எல்லாம் போஸ்டர்களை ஒட்டி விஷுவல் பொல்யூஷன் ஏற்படுத்தி சாலையில் பயணிப்போருக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தி விபத்துக்கு வழிவகுக்கிறது.