மதுரை மேலுார் ஒரு போக பாசன விவசாயிகள் வலியுறுத்தல் | Tungsten mining | Villageres protest | Madurai
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி பகுதியில் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க விடுத்த ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி 48 கிராம மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலுார் ஒரு போக முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் கடந்த 29ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேசிய வணிக வரி அமைச்சர் மூர்த்தி, மேலுாரில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. இதற்கான சிறப்பு தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதை ஏற்று 48 கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இந்நிலையில் மேலூர் தனியார் திருமண மண்டபத்தில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் அதன் செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.