உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / எம்ஏ, எம்பிஏ. ஐடிஐ என பல பட்டங்கள் பெற்ற 72 வயது தாத்தா

எம்ஏ, எம்பிஏ. ஐடிஐ என பல பட்டங்கள் பெற்ற 72 வயது தாத்தா

எம்ஏ, எம்பிஏ. ஐடிஐ என பல பட்டங்கள் பெற்ற 72 வயது தாத்தா / 72 Year old College Student / Desire to read more / Mailadudurai ‛கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா; இல்ல ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா, என காலச்சக்கரம் உருண்டோடி வாழ்க்கைப் பயணம் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. ஜெட் வேகத்துல எகிறி குதிக்கும் இந்தக்காலத்துப் பசங்களோட 72 வயசு தாத்தா ஒருத்தர், புத்தக மூட்டைய சுமந்துக்கிட்டு தெனைக்கும் காலேஜ் போறார்ன்னா நம்ப முடியுதா என்ன. அப்படியொரு அதிசய மனுஷன் கடலுார் மாவட்டம் வடலுார்ல இருக்காருன்னா பாத்துக்கோங்க. அந்த பெரிய மனுஷன் சின்னப் பசங்களோடு எப்படி காலேஜ்ல படிக்கிறாரு; சின்னப் பசங்களோட எப்டி குப்ப கொட்டுறார்ன்னு பாக்கலாம் வாங்க. அவரு பேரு செல்வமணி, வயசு 72. மனுஷன் MA, MBA, ITI ன்னு ரொம்ப நல்லாவே படிச்சவரு. நெய்வேலி என்.எல்.சி.,யில 37 வருஷமா வேல பார்த்து ரிட்டையர்ட் ஆயிருக்காரு. இவருக்கு ஒய்ஃப் (wife), ரெண்டு டாட்டர்ஸ் (daughters) இருக்காங்க. ரெண்டு டாட்டர்ஸ்சையும் நல்லா படிக்க வச்சு. நல்ல வசதியான இடத்துல கட்டிக்கொடுத்துட்டாரு. பேரன், பேத்தின்னு வீடே நெறஞ்ச வீடா இருக்கு. கால் மேல கால் போட்டுட்டு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து, சொகம் கொட்டிக் கிடக்கு. இருந்தாலும் ஆச யார விட்டது. செல்வமணி மனுஷனுக்கு மேலும் படிக்கோணும்ன்னு ஆச. தனது ஆசய ஆச மனைவி கிட்ட சொன்னாரு. அதுக்கு அவங்க, ‛அத்தான். என்னத்தான். என்னக் கொஞ்சம் பாரத்தான். வயசான காலத்துல மேற்கொண்டு படிச்சு என்னத்த கழட்டப்போறீங்க அத்தான். பேயாம வீட்டுல கிடங்கத்தான். ஒரு ஓரமா முடங்குங்க அத்தான். வேல வேலைக்கு ஃபுல் கட்டு கட்டுங்க அத்தான். பேத்தி, பேரன் மார்கள கொஞ்சிட்டு இருங்க அத்தான். சட்டயில பொத்தான மாட்டிக்கிட்டு செத்த படுங்க அத்தான், என்றார். மேலும் படிக்க மனைவி, மக்கள், சொந்தம், பந்தம்ன்னு ஒருத்தர் கூட செல்வமணிக்கு சப்போர்ட் பண்ணல. இப்படியே பத்து வருஷம் உருண்டோடிடுச்சு. விட்டா சங்கு ஊதுர வரைக்கும் படிக்க விட மாட்டாங்க போலிருக்கு என எண்ணிய செல்வமணி, ‛பாரதி கண்ணம்மா. நீயடி சின்னம்மா, கேளடி பொன்னம்மா,ன்னு மனைவிய பார்த்து பாட்டுப்படிச்சிட்டு சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாரு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில உள்ள சீனிவாசா சுப்புராயா அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் பாடப்பிரிவுல சேர்ந்தாரு. காலேஜ் பசங்களோட பசங்களா கிளாஸ் ரூம்ல உடர்கார்ந்து கவனமா பிடிச்சிட்டு இருக்காரு. இப்போ செகண்ட் இயர் வரைக்கும் போயிட்டாரு. காலேஜ் பிரண்ட்ஸ் இவர செல்வமணிய ‛தாத்தா தாத்தான்னு ரொம்பவே பாசமா அழச்சிட்டு வர்றாங்க. ‛தாத்தா, நீங்க தோத்தா எப்படி இருக்கும்ன்னு ஜாலியா பேசுவாங்க. ‛டேய் பேராண்டிகளா, இந்த தாத்தா... தோத்ததா சரித்திரம், வரலாறு, ஹிஸ்ட்ரி, ஜியாகரஃபின்னு எதுவும் இல்லாடா, என பதிலுக்கு கலாய்ச்சிட்டு நடைய கட்டுவார். காலேஜ்க்கு போய் படிச்சுட்டு. வேக வேகமா வீட்டுக்கு வருவாரு. வயசான மனைவிக்கு தேவையான சகல உதவிகளையும் செஞ்சு முடிச்சிட்டு துாங்குறதுக்கு நைட் 11 மணிய தாண்டிடும். செத்த நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு எர்லி மார்னிங் (early morning) 4 மணிக்கெல்லாம் மனுஷன் கண் விழிச்சு எழுந்துருவாரு. இப்படியே செல்வமணியின் காலச்சக்கரம் உருண்டோடிட்டு இருக்கு. உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சியின் அடையாளமாக திகழும் செல்வமணி தாத்தா. இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடம் என சொன்னால் அது மிகையாகாது.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி