உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கரடிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் | Bear Kingdom in Ooty

கரடிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் | Bear Kingdom in Ooty

கரடிகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் / Bear Kingdom in Ooty சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பார்கள். இந்தியாவில் குஜராத் தவிர வேறு இடங்களில் சிங்கம் வசிப்பிடம் இல்லை. காட்டு ராஜா சிங்கத்திற்கு பதிலாக கரடிகள் சிங்கிளா வந்து கெத்து காட்டி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பகல், இரவு பாராமல் சிங்கத்திற்கு பதிலாக சிங்களாக வரும் கரடிகள் வீட்டின் கிச்சன் அறைகளுக்குள் புகுந்து உணவு தேடுகிறது. கிடைக்காத பட்சத்தில் சமையல் எண்ணெய், சர்க்கரை, மாவு உள்ளிட்டவற்றை ஒரு பிடி பிடிக்கிறது. வீடுகள், கடைகள் ரேஷன் கடைகளில் உள்ள ஃபிரிஜ்ஜை லாவகமாக திறந்து ஐஸ்க்ரீம், பிஸ்கட், பால் உள்ளிட்டவற்றை ரசித்து, ருசித்து செல்கிறது. பால் வேன்களின் கதவுகளை ஈஸியாக திறந்து பால் பாக்கெட்டுக்களை ஆட்டையை போட்டு பால் குடிக்கிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக் காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவது வழக்கமாகி விட்டது. கோத்தகிரி அருகே உள்ள கேர் பெட்டா பகுதியில் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் வாகனம் நின்றிருந்தது. அங்கு வந்த கரடி வாகனத்தின் கதவை லாவகமாக திறந்து பால் பாக்கெட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ருசித்து விட்டு நடையை கட்டியது. breath: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட புதுமந்து, வண்டிச்சோலை, பாரஸ்ட் கேட் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதுமந்து செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் உணவு தேடி கரடி ஒன்று உலா வந்தது. அங்கு சுற்றுலாப் பயணிகள் தங்கி இருந்த வாசல் கதவு பகுதியில் கரடி போஸ் கொடுத்தபடி நின்றது. கரடியை பார்த்து சுற்றுலா பயணிகள் தொடை நடுங்கினர். அச்சத்துடன் அறைகளுக்குள் சென்று முடங்கினர். ஊட்டி ஊட்டியில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் தினமும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று அதிகாலை பூங்காவில் கரடி ஒன்று உலா வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்கள் கரடியை கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர். பூங்காவில் கரடி நுழைந்ததால் பாதுகாப்பு கருதி காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. ஊருக்குள் உலா வரும் வன விலங்குகளை பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும் என குடியிருப்போர் வலியுறுத்தினர். வன விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து மனிதன் அட்டகாசம் செய்து வருவது வழக்கமாகி விட்டது. வன விலங்குகளின் வாழ்வாதாரம் கருதி காடுகளை காலி செய்து விட்டு சமவெளிப் பகுதிகளில் மனிதன் குடியேற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். விடிவு தான் பிறக்கவில்லை.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !