விலங்குகளை மோப்ப நாய் உதவியுடன் வேட்டையாடியது அம்பலம் | Nilgiris | Hunting animals
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக வெலிங்டனை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் ராஜன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாட்டு வெடிகுண்டு, சுருக்கு கம்பிகள், கார் உள்ளி்ட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பல இடங்களிள் வனவிலங்குகளை வேட்டையாட வெடியை புதைத்து வைத்துள்ளதாக புகார் எழுந்தது. கோர்ட் அனுமதி பெற்று ராமகிருஷ்ணனை வனத்துறையினர் கஸ்டடி எடுத்தனர். உதவி வன பாதுகாவலர் மணிமாறன், குன்னூர் ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர், போலீசார், வருவாய் துறையினர் கிளண்டேலில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். அதில் ஆற்றோரத்தில் ஷெட் அமைத்து வேட்டை நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. வனவிலங்குகளை வேட்டையாட புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகளை அகற்றினர். மீண்டும் சிறையில் அடைத்தனர்.