சட்டசபை முழுவதும் பலாப்பழம் | Jackfruit supplied by BJP MLA
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜ எம்எல்ஏ., கல்யாணசுந்தரம். இவர் தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழத்தினை புதுச்சேரி முதல்வர், அமைச்சர் உள்பட 33 பேருக்கு பரிசாக வழங்கினார். பலாப்பழம் புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்குள் மினி வேனில் , இறங்கியது. முதல்வர் ரங்கசாமி , அமைச்சர்கள், உட்பட 33 எம்எல்ஏக்களுக்கு 20 கிலோ எடையுள்ள 2 பலாப்பழம் மற்றும் அமைச்சரின் தனி செயலருக்கு ஒன்று என பழங்கள் வழங்கப்பட்டது. இதை எம்எல்ஏக்களின் உதவியாளர்கள் மகிழ்ச்சியுடன் தூக்கி சென்று கார்களில் வைத்தனர். இதனால் சட்டசபை வளாகம் முழுவதும் பலாப்பழமாக காட்சியளித்தது.
மே 13, 2024