உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா நிறுத்தம் | church function issue | Gangavalli | Attur

கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய தேர் திருவிழா நிறுத்தம் | church function issue | Gangavalli | Attur

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் பழமையான கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு தேர் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி மாலையில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கிறிஸ்து அரசர், புனித நிக்கல், ஆரோக்யமாதா ஆகிய மூன்று தேர்கள் திருவீதி உலா எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன. மூன்று மினி சரக்கு வேனில் வடிவமைத்துள்ள தேர்களிலும் சிலைகள் எடுத்துச் சென்று வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதனால் தேரினை திருவீதி உலா எடுத்துச் செல்வதற்கு கெங்கவல்லி போலீசார் அனுமதி மறுத்தனர். ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் சுமூக பேச்சுவார்த்தை நடத்திய பின் அமைதியான முறையில் தேர்த்திருவிழா நடத்த வேண்டும் என போலீசார் கூறினர். தேர்களில் சிலைகள் வைக்காததால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. கிறிஸ்து அரசர் ஆலய வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை