தமிழ்நாடு பிராமணர் சங்கம் சேலம் கிளை ஏற்பாடு | Help to poor students | Salem
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சேலம் மாவட்ட கிளை சார்பில் ஆண்டு தோறும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவச உபநயனம் எனும் பூணூல் கல்யாணம் வெகு சிறப்பாக நடத்தப்படும். இந்தாண்டு நிகழ்ச்சி சேலம் மரவனேரி ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 12 பேருக்கு பூணுால் கல்யாணம் தடபுடலாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பஞ்சநாதன், ரமேஷ், நாகலட்சுமி, ஆடிட்டர் ஸ்ரீராம், ராமு, பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 12 பேர் தங்களது பெற்றோர்களுடன் வரிசையாக அமர்த்தப்பட்டு பட்டு வஸ்திரம், பஞ்சபாத்திரம், சீர்வரிசை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. குருக்கள் வேதங்கள் ஓத 12 பேருக்கு பூணூல் கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. காமாட்சி அம்மன் வெள்ளி கவச அலங்காரத்தில் எழுந்தருளினார். லட்சார்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.