/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ நெல்லை அணி 18.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி | TNPL Cricket Match | Salem
நெல்லை அணி 18.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி | TNPL Cricket Match | Salem
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேலம் மற்றும் நெல்லை அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் பீல்டிங் தேர்வு செய்தார். சேலம் அணிக்கு அபிஷேக் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். கவின் 16, விவேக் 13, விஷால் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ராபின் பிஸ்ட் 23, கேப்டன் ஷிஜித் சந்திரன் 20 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தனர். சோனு யாதவ் பந்தில் சன்னி சாந்து 14, முகமது அத்னன் கான் 11 ரன்கள் எடுத்தனர். பொய்யாமொழி எடுத்த எடுப்பிலேயே அவுட் ஆனார். 17 ரன்கள் எடுத்து ஹரிஷ் குமார் கைகொடுத்தார்.
ஜூலை 12, 2024