மதுவிலிருந்து மக்களைக் காப்பாற்ற யாகம் வளர்க்கும் பாமக
மதுவிலிருந்து மக்களைக் காப்பாற்ற யாகம் வளர்க்கும் பாமக|Sarva mangala mahayagam on bigger pattali makkal katchi தமிழகத்தில் மதுவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டது. மது வருமானத்தில் ஆட்சி நடப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர். எனினும் தமிழ்நாட்டில் சாராயம் ஒழிந்ததாக தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை ஆறு ஓடுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். மதுவால் தமிழ்நாடு சீர்கேட்டை சந்தித்து வருவதால் மது விலக்கு கொள்கையை அமல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி அக்டோபர் 2 ம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் சர்வ மங்கள மகா யாகம் இன்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் காந்தி பரசுராமன் தலைமையில் நடைபெறும் சர்வ மங்கள மகா யாகத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். யாகத்துக்கு தேவையான பொருட்களை கும்பகோணம் மகாமக சாலையிலிருந்து மகளிர் அணியினர் ஊர்வலமாக எடுத்து வந்தனர். மது விலக்கு அமல்படுத்த வலியுறுத்தி விசிக மற்றும் பாமக கட்சியினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதை பொருட்டாக கருதாமல் விளையாட்டு அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்க்கும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சியினர் குமுறுகின்றனர்.