உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார்| TK member harasses Hinduism| Kumbakonam

ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார்| TK member harasses Hinduism| Kumbakonam

ஹிந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார்/ TK member harasses Hinduism/ Kumbakonam சத்தீஸ்கர் மாநிலம் நாராயன்பூர்ல இருக்குற இரண்டு கன்னியாஸ்திரிங்க, மதமாற்றத்துல ஈடுபட்டதா சொல்லி, ஜூலை 25ம் தேதி போலீசார் அவங்கள கைது பண்ணி இருக்காங்க. விசாரணைல ரெண்டு பேரும் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ்னு தெரிய வந்துச்சு. இதுக்கு பல அரசியல் கட்சிகள் பல கட்ட எதிர்ப்பு தெரிவிச்சாங்க அதன் ஒரு பகுதியா, கும்பகோணம் துறவியர் பேரவை சார்புல அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில நடந்துச்சு. பதாகைகளோட பேரணியா சென்று எதிர்ப்பு கோஷம் போட்டாங்க. திமுக மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க. கூட்டத்துல பேசின திராவிட கழக முன்னாள் மாநில செயலாளர் ரமேஷ் சர்ச்சைக்குரிய கருத்த பேசி இருக்காரு. ஹிந்து மதத்தில வேசியோட மகனா இருக்கிறதுக்கு பதிலா சுயமரியாதையோட கிறிஸ்தவனாய் இஸ்லாமியனா வாழ்ந்திடலாம்னு ஆபாசமாக பேசி சர்ச்சை எழுப்பியிருக்காரு. Vdo dur 00:59-02:00 இதுக்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமையில தஞ்சாவூர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் மனு கொடுக்கப்பட்ருக்கு. சமூக மோதல உருவாக்குகிற விதத்தில சர்ச்சையா ஆபாசமா பேசின ரமேஷ, உடனடியா கைது செய்யணும்னு பலதரப்பு மக்கள் கோரிக்கை வச்சிருக்காங்க. பெண்கள் முன்னேற்றத்துக்கும் பெண் சுதந்திரத்துக்கும் பாடுபடுறோம்னு பேசுற தி.க அமைப்பு நிர்வாகியே, பெண்கள இவ்வளவு கேவலமா இழிவு படுத்துனது பெண்கள் மத்தியில கொந்தளிப்ப ஏற்படுத்தியிருக்கு.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை