பிரதான பக்தர்கள் சுவாமி தரிசனம் | Thiruvallur|Kandaswamy Temple Kumbabhishekam
திருவள்ளூர் மாவட்டம் மணவூர் கந்தஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4ம் தேதி வேம்புலியம்மன் , பொன்னியம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கு அபிஷேகத்துடன் விழா தொடங்கியது. 6ம் தேதி கணபதி ஹோமம், 7 ம் தேதி முதல்கால யாக பூஜை நடைபெற்றது. காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடானது. சிவாச்சார்யார்கள் வேத மந்திரம் முழங்க கந்தசாமி, ஆறுமுகசாமி மற்றும் கிராம தேவதைகளான வேம்புலியம்மன் , பொன்னியம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்கர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.