உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / GHCL பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் ஏற்பாடு | Free computer training camp | GHCL, Fedcrot | Trichy

GHCL பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் ஏற்பாடு | Free computer training camp | GHCL, Fedcrot | Trichy

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சூளியாபட்டி கிராமத்தில் GHCL பவுண்டேஷன் மற்றும் பெட்கிராட் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு மாத கால இலவச கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. சூளியாபட்டி ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் துளசிவேல், செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். பெட்கிராட் பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். பொருளாளர் சாறாள் ரூபி, பயிற்சியாளர் கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். GHCL பவுண்டேஷன் CSR அலுவலர் சுஜின் பேசுகையில், பேசிக் கம்ப்யூட்டர் தெரிந்து கொண்டால் உயர் கல்வி படிக்கும் போது உதவியாக இருக்கும். வேலைக்கு செல்லும்போது கம்ப்யூட்டர் தெரிந்திருந்தால் முன்னுரிமை வழங்குவர். எனவே காலம் தவறாது குறித்த நேரத்தில் வருகை தந்து கவனமாக பயில வேண்டும் என்றார். பயிற்சியி்ல் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கையேடு மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

மே 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி