உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / நீதிமன்ற உத்தரவை மதிக்காத சர்வாதிகார ஆட்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு

நீதிமன்ற உத்தரவை மதிக்காத சர்வாதிகார ஆட்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு

நீதிமன்ற உத்தரவை மதிக்காத சர்வாதிகார ஆட்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு | Trichy | Hindu Munnani protest | Hindu Munnani members arrested திருப்பரங்குன்றம் தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், நீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என கூறி திருச்சியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி இல்லாததால், மரக்கடை பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். கைது செய்யும் போது ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பாஜ மற்றும் இந்து முன்னணியினர் ஊர்வலமாக வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ப்ரத் கார்த்திகை தீபம் விவகாரம் இந்து முன்னணியினர் 200 பேர் கைது திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரியும், நீதிமன்ற உத்திரவை மதிக்காத அறநிலையத்துறையினரை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில செயலாளர் சேவுகன், மதுரை கோட்ட பொறுப்பாளர் அரசபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக அரசுக்கு எதிராகவும், அறநிலையத்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்ட இந்து முன்னணியினர் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

டிச 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை