உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ரிசர்வேஷன் கோச்சுகள் ஆக்கிரமிப்பு | Passengers jammed in Pallavan Express | Trichy

ரிசர்வேஷன் கோச்சுகள் ஆக்கிரமிப்பு | Passengers jammed in Pallavan Express | Trichy

கோடை விடுமுறையையொட்டி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரயில்வே ரிசர்வ் கோச்சுகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் இருக்கைகளை ஆக்கிரமித்து பயணம் செய்யும் சம்பவம் தொடர்கிறது. இப்பிரச்னை பல ரயில்களில் தொடர்ந்து நடக்கிறது. டிடிஆர் இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருக்கைகளை ஆக்கிரமிப்போரை பிடித்து போலீசில் ஒப்படைப்பது என்பது இயலாத காரியம். எனவே இந்த விஷயத்தில் டிடிஆர்கள், ஆர்பி போலீஸ் மற்றும் ஆர்பிஎஃப் போலீசார் கப்சிப் ஆகி விடுகின்றனர். அதேபோல் திருச்சி வழியாக காரைக்குடி - சென்னை பல்லவன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்லவன் ரயிலில் ரிசர்வ் கோச்சுகளில் அதிகளவு பயணிகள் பயணம் செய்வதால் வயது முதிர்ந்தவர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் டாய்லெட் கூட செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். பல்லவன் ரயில் திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக மக்கள் அனைவரும் கட்டணம் குறைவு என்பதால் பல்லவன் ரயிலையே தேர்வு செய்கின்றனர். இந்த ரயிலில் தட்கல் கட்டணமாக 178 ரூபாய். அதுவே பஸ் கட்டணம் குறைந்தது 264 முதல் 612 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மே 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை