வீரர்கள் கூடியிருந்தபோது உள்ளே புகுந்த குண்டுதாரி 3 security personnel killed in suicide attack at p
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள சிவில் துணை ராணுவ தலைமையகத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ மையம் நகரின் மையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நெரிசலான பகுதியில் உள்ளது. பயங்கரவாதிகள் 3 பேர் தாக்குதல் நடத்த நடந்தே வந்துள்ளனர். அதில் 2 பேர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டும் மற்றொருவன் துப்பாக்கி உடனும் வந்துள்ளனர். ஒரு தற்கொலை படை குண்டுதாரி துணை ராணுவ தலைமையகத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு நடந்து சென்று வெடிகுண்டை வெடிக்க செய்தான். மற்ற இருவரும் வளாகத்திற்குள் வாகன நிறுத்தும் இடத்திற்குள் நுழைந்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இருவரையும் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதலில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர். 150க்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்புக்கு தயாராகி கொண்டு இருந்த சமயத்தில்தான் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. முன்னதாக, 2 வாரங்களுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள கோர்ட் அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். தற்போது துணை ராணுவ தலைமையகம் குறிவைக்கப்பட்டது. தெஹ்ரிக் இ தலிபான்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. #SuicideAttack #ParamilitaryHqAttack #Pakistan #TerroristAttack #SuicideExplosions #HumanBombAttack