கவர்னருக்கு தன்னிச்சை அதிகாரம் இல்லை: பரபரப்பு தீர்ப்பின் விவரம்
சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலத்தாமதம் செய்து வருவதாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்தது. வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள். அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 200ன்படி கவர்னர் முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்து இருப்பது சட்டப்படி தவறானது. மசோதாக்களை ஜனாதிபதிக்கு முடிவுக்கு அனுப்பியது சரியானதல்ல. அந்த 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளிக்கிறோம்.