உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பின்னலாடை தொழிலை ஆளப்போகும் AI தொழில்நுட்பம்! AI Technology | Garment Industry | Automating | Tirupp

பின்னலாடை தொழிலை ஆளப்போகும் AI தொழில்நுட்பம்! AI Technology | Garment Industry | Automating | Tirupp

திருப்பூர் பின்னலாடை தொழில் காலத்துக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. தற்போது AI தொழில்நுட்பம் பின்னலாடை தொழிலில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. கால விரயம் மற்றும் உற்பத்தி செலவுகளைக் கட்டுப்படுத்தி, தரமான ஆடை உற்பத்தியை சாத்தியமாக்கும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பங்கள், பின்னலாடை தொழிலில் புது ரத்தம் பாய்ச்சி கொண்டுள்ளன. பின்னலாடை தொழிலி் நூலை துணியாக்கும் நிட்டிங், வண்ணமேற்றும் சாய ஆலைகள், மதிப்புக்கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு உதவும் பிரின்டிங், எம்ப்ராய்டரிங் என பல்வேறு வகை ஜாப்ஒர்க் பிரிவுகள் உள்ளன. ஆடை உற்பத்தியில் சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள், கடந்த பத்தாண்டுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும் கடந்த ஆறு மாதங்களாக ஏஐ தொழில்நுட்ப இயந்திரங்கள் வருகை அதிகரித்துள்ளது. கால விரயத்தையும், கூடுதல் செலவுகளையும், கழிவு உருவாவதை குறைக்க, இத்தகைய தொழில்நுட்பங்கள் உதவுவதாக தொழில்துறையினர் வரவேற்பு தெரிவிக்கின்றனர். முன்னணி தொழில்நிறுவனங்களின் இளம் நிர்வாகிகள், புத்தாக்கத்துடன் கூடிய புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் புகுத்த களமிறங்கியுள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டு வரும் என தொழில்நிறுவனத்தினர் விளக்குகின்றனர். #AITechnology #GarmentIndustry #Automating #Tiruppur #FashionTech #SmartManufacturing #AIInFashion #SustainableGarment #TextileInnovation #FutureOfFashion #DigitalTransformation #ApparelTech #AIRevolution # garmentautomation #TiruppurTextiles #Industry40 #TechInTextiles #FashionAutomation #ManufacturingExcellence

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை