உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்பளம் போல் நொறுங்கிய டெம்போ டிராவலர்; கதறி அழுத குடும்பம்! | Andhra Accident | Police Investigatio

அப்பளம் போல் நொறுங்கிய டெம்போ டிராவலர்; கதறி அழுத குடும்பம்! | Andhra Accident | Police Investigatio

கர்நாடகா சிக்கபல்லபுரத்தை சேர்ந்த 14 பேர் கொண்ட குடும்பத்தினர் நேற்று திருப்பதி சென்றனர். தரிசனம் முடித்து அனைவரும் டெம்போ டிராவலரில் சொந்த ஊர் கிளம்பினர். வேன் இன்று காலை 6 மணி அளவில் ஆந்திரா தொம்மனா பாவி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அதிவேகமாக வந்த ஒரு லாரி, டெம்போ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. டெம்போவின் ஒரு பாதி முற்றிலும் சேதமடைந்து உள்ளே இருந்தவர்கள் அலறினர். உள்ளே பயணித்த சரண் வயது 17, மேகர்ஷ் 17, ஸ்ரவாணி 28 ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். டிரைவர் மஞ்சுநாத் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக லாரி மோதியதற்கு எதிர் திசையில் இருந்த 2 பேர் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். முடிவேடு போலீசார் டெம்போவை அப்புறப்படுத்தி சடலங்களை மீட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை அருகில் உள்ள டோல்கேட் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !