உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணா பல்கலை மாணவியை சீண்டியது இவனா? பகீர் பின்னணி | Anna University | Girl Issue

அண்ணா பல்கலை மாணவியை சீண்டியது இவனா? பகீர் பின்னணி | Anna University | Girl Issue

சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் இருந்த தகவல்கள் அதிர வைக்கிறது. டிசம்பர் 23ம் தேதி இரவு மாணவி தனது நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசாமிகள் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியும் விடாமல் கொடுமை செய்துள்ளனர். அதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். நடந்ததை வெளியில் சொன்னால் எடுத்த வீடியோவை வெளியில் பரப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இருந்தும் மாணவி போலீசில் துணிச்சலாக புகார் கொடுத்தது மூலம் அவருக்கு நடந்த துயரங்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து கல்லூரி வளாகத்தில் பாதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சில சிசிடிவி கேமராக்கள் செயல்இழந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி, அவரது ஆண் நண்பரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தினர். மாணவி சொன்ன அடையாளங்களை வைத்து கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

டிச 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை