சிவசங்கரின் சர்ச்சை பேச்சு: வச்சு செய்த அண்ணாமலை | Annamalai | BJP state president | Sivasankar | DM
அரியலூரில் சோழ பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பேசிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், ராமருக்கு வரலாறே இல்லை என பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். அமைச்சரின் பேச்சுக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். பகவான் ஸ்ரீ ராமர் மீது யாரும் நினைத்து பார்க்காத அளவு திமுகவின் திடீர் பற்று உண்மையிலேயே கவனிக்க வேண்டிய விஷயம். கடந்த வாரம் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, சமூக நீதி, மதச்சார்பின்மை, அனைவரு சமம் என்பதை போதித்தவர் பகவான் ஸ்ரீராமர் என்று கூறினார். இன்று ஊழல் கறை படிந்த திமுக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், ராமர் இருந்ததே இல்லை என்று தைரியமாக கூறி, இதெல்லாம் சோழன் வரலாற்றை அழிக்கும் தந்திரம் என்றும் சொல்கிறார். திமுக தலைவர்களின் நினைவுகள் எவ்வளவு சீக்கிரம் மறைந்துபோகிறது என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. புதிய பார்லிமென்ட் வளாகத்தில் சோழ வம்ச செங்கோலை நிறுவியபோது பிரதமர் மோடியை எதிர்த்தவர்களும் இவர்கள் தானே. தமிழகத்தின் வரலாறு 1967ல் தொடங்கியதாக நினைக்கும் கட்சியான திமுக, நாட்டின் வளமான கலாச்சாரம், வரலாற்றின் மீது ஒரு அன்பை வெளிக்காட்டுவது நகைச்சுவையாக உள்ளது. ஒருவேளை திமுக அமைச்சர்கள் ரகுபதி, சிவசங்கர் இருவரும் அமர்ந்து, விவாதித்து, ராமர் குறித்து ஒருமித்த கருத்துக்கு வர வேண்டிய நேரம் வந்திருக்கலாம்.