உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கை அறிவிப்பு | Annamalaiar temple | TV Malai | Karth

கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கை அறிவிப்பு | Annamalaiar temple | TV Malai | Karth

தி.மலை தீப திருவிழா மகா தீபம் காண மலையேறும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நிறைவு நாளான டிசம்பர் 13 அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயர தீபமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவில் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கோயில் வளாகத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய், சுகாதாரம், பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை