உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார் டிராக்டர் யாருக்கு? | Avaniyapuram Jallikattu | Jallikattu | Madurai

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கார் டிராக்டர் யாருக்கு? | Avaniyapuram Jallikattu | Jallikattu | Madurai

மதுரையில் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை ஆர்ப்பரிப்புடன் துவங்கியது. 1200 காளைகளை உரிமையாளர்கள் பதிவு செய்திருந்தனர். 900 மாடு பிடி வீரர்கள் பெயர்களை கொடுத்திருந்தனர். பல சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் புதிய வீரர்கள் களம் இறங்கினர். வாடி வாசலில் சீறி பாய்ந்த காளைகளை தீரமுடன் அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். காளைகளின் திமில் தழுவிய வீரர்களும், வீரர்களை பந்தாடி எல்லையை கடந்த காளைகளும் வென்றதாக அறிவிக்கப்பட்டன. களத்தில் நின்று விளையாடிய காளைகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் தங்க காசு, சைக்கிள், பீரோ என பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை