இஸ்ரேல் பிரதமருடன் பைடன் பேசியது: முழுவிவரம் Joe Biden Netanyahu phone call Israel hamaz war
2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அன்று முதல் இன்று வரை காசாவில் போர் சத்தம் ஓயவில்லை. இஸ்ரேல், ஹமாஸ் சண்டையில் காசாவில் மட்டும் இதுவரை 42 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 98 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹமாசுக்கு ஆதரவாக, லெபனானில் செயல்படும் ெஹஸ்புலா பயங்கரவாத இயக்கமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி முதல் ெஹஸ்புலா மீதான தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. லெபனானில் 15 நாட்களில் 2100க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத் துறை கூறியது. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. கடந்த 1ம்தேதி இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியது. அதற்காக ஈரானுக்கு மறக்க முடியாத பதிலடியை கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால் மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் பைடன் போனில் பேசினார் இருவரும் கிட்டத்தட்ட அரை மணிநேரம் பேசினர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.