உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண் டாக்டர் சம்பவத்தில் CBI சொன்ன உண்மை-ஷாக் ரிப்போர்ட் | kolkata woman doctor case | CBI Report

பெண் டாக்டர் சம்பவத்தில் CBI சொன்ன உண்மை-ஷாக் ரிப்போர்ட் | kolkata woman doctor case | CBI Report

கொல்கத்தா கொடூரம் செய்தது எத்தனை பேர்? CBI ரிப்போர்ட் இதோ! கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் நைட் டூட்டியில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில், போலீஸ் டிப்பார்ட்மென்ட்டில் தன்னார்வலராக இருந்த சஞ்சய் ராய் என்ற கொடூரனை கொல்கத்தா போலீஸ் கைது செய்தது. இந்த கொடூர காரியத்தை சஞ்சய் ராய் மட்டும் அல்ல; இன்னும் சிலர் சேர்ந்து செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. பெண் டாக்டருக்கு நீதி கேட்டு பெரிய அளவில் போராட்டம் வெடித்ததால், சில நாட்களில் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதுவரை நடந்த விசாரணை பற்றி விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி இருந்தது. இந்த முதல் கட்ட விசாரணை அறிக்கை பற்றி முக்கிய தகவல்கள் பற்றி சிபிஐ வட்டாரம் கூறியதாவது:- பெண் டாக்டர் சம்பவத்தில் கொடூரன் ஒருவன் தான். சஞ்சய் ராய் தனி ஆளாக தான் இந்த காரியத்தை செய்து இருக்கிறான். பயிற்சி டாக்டரை கொடூரமாக தாக்கி நிலைகுலைய செய்து பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறான். பின்னர் அவனே அவரை கொன்று விட்டு தப்பி இருக்கிறான். சம்பவம் நடந்த நேரத்தில், பெண் டாக்டர் தூங்கிக்கொண்டு இருந்த செமினார் ஹால் பகுதிக்கு சஞ்சய் ராய் மட்டும் தான் சென்றான். வேறு யாரும் போகவில்லை. இதை அந்த பில்டிங்கில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்துள்ளோம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், தடய அறிவியல் சோதனையிலும் கொடூர காரியத்தை செய்தவன் ஒருத்தன் தான் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ