கனமழை முடியட்டும்: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு | Chennai Rain | School Leave
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம். ஒருநாள் முன்னதாகவே விடுமுறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளையும் ஒத்தி வைக்க வேண்டும்.
அக் 15, 2024