மோசமான வானிலையால் விமான போக்குவரத்து தாமதம்
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் காற்றுடன் கனமழை பெய்கிறது. மோசமான வானிலை காரணமாக, சென்னைக்கு விமானங்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூர், துபாய், அந்தமான், விஜயவாடா, திருச்சி புவனேஸ்வர், மதுரை, கோவை, கொச்சி ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட 12 விமானங்கள், தாமதமாக புறப்பட்டன. சென்னையில் தரை இறங்க வரும் விமானங்கள், ஓடுபாதை தெளிவாக தெரிந்தால் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக, உடனடியாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்து விட்டு பின்பு தரை இறங்குகின்றன.
நவ 30, 2024