₹1 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்களுடன் 4 பயணிகள் கைது | Chennai Airport | Malaysia |
மலேசியாவில் இருந்து பெருமளவு தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. சென்னை ஏர்போர்ட்டில் மலேசியாவில் இருந்து வரும் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். செவ்வாய் நள்ளிரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த 4 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. சென்னையை சேர்ந்த அந்த 4 பேரும் குழுவாக டூரிஸ்ட் விசாவில் வந்திருந்தனர். 4 பேரையும் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் வந்தது. அவர்களின் உடமைகள் மற்றும் தனியறையில் நடத்திய சோதனையில் மறைத்து வைத்திருந்த தங்க செயின்கள், 3,220 இ-சிகரெட்கள், 4 ஐபோன் 16 ப்ரோ மொபைல்கள் சிக்கியது. மொத்தம் 700 கிராம் தங்கம் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 1 கோடியே இரண்டு லட்சம். கடத்தல் பயணிகள் 4 பேரையும் சென்னை ஏர்போர்ட் கஸ்டம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தலின் பின்புலம் குறித்து விசாரணை நடக்கிறது.