/ தினமலர் டிவி
/ பொது
/ பண்ணையாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல் Poultry Farmers Strike | Chicken Price Hike
பண்ணையாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தல் Poultry Farmers Strike | Chicken Price Hike
திருப்பூர் மாவட்டம் பல்லடம், காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றனர். பிராய்லர் நிறுவனங்களிடம் இருந்து கோழி குஞ்சுகளை வாங்கும் அவர்கள், 42 நாட்கள் பண்ணையில் வைத்து வளர்த்து கொடுக்கின்றனர். அதற்கு கிலோ ஒன்றுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 6 ரூபாய் 50 காசு கூலியாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போதும் அதே கூலி தான் வழங்கப்படுகிறது. தற்போது மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, ஆள் கூலி போன்றவை அதிகரித்துள்ளதால் கூலியை அதிகரிக்க வேண்டுமென பண்ணையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஜன 02, 2026