வழக்கு பதிவு செய்வேன் என கலெக்டர் எச்சரிக்கை | Grievance day | Tanjore | Collectore | School student
மனு அளிக்க வந்த மாணவர்கள் டென்ஷனான கலெக்டர் பெற்றோருக்கு வார்னிங் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அங்கு வந்த தஞ்சை வடுகன்பட்டியை சேர்ந்த மக்கள் பஸ் வசதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். தங்கள் பிள்ளைகள் பள்ளி செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுதை சொல்ல, பள்ளி சீருடையில் அவர்களையும் அழைத்து வந்திருந்தனர். மனுவை வாங்கிய கலெக்டர் பிரியங்கா, பள்ளி செல்ல வேண்டிய நேரத்தில் மாணவர்கள் அங்கு வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் மனு கொடுத்தால் போதாதா, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் எதற்காக அழைத்து வந்தீர்கள் என பெற்றோரை சத்தம் போட்டார்.