முடிந்தது இஸ்ரேல்-ஹமாஸ் போர்-பரபரப்பு gaza ceasfire | israel vs hamas | trump gaza plan | hostages
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பயங்கர போர் நடந்து வருகிறது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. 1200 பேரை கொன்று குவித்தது. 251 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது. அன்று வெடித்த போர் இப்போது வரை தீவிரமாக நடக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் இதுவரை 66,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். ஆனால் ஹமாஸ் தரப்பில் யோசிக்க நேரம் கேட்கப்பட்டது. ஹமாஸ் தரப்பில் இருந்து உடனடியாக நல்ல முடிவு வரதாத நிலையில், டிரம்ப் பரபரப்பு எச்சரிக்கையை விடுத்தார். ‛ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை தான் டைம். அதற்குள் ஹமாஸ் அமைப்பு அமைதி திட்டத்துக்கு உடன்பட வேண்டும். இது அவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு. இல்லாவிட்டால், நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு நாங்கள் காட்ட நேரிடும். எது எப்படி இருந்தாலும் மேற்காசியாவில் அமைதி உருவாகும் என்று டிரம்ப் கூறி இருந்தார். டிரம்ப் வெளியிட்ட பகிரங்க மிரட்டலை அடுத்து இப்போது ஹமாஸ் பயங்கரவாதிகள் பணிந்து விட்டனர். உடனடியாக சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், அனைத்து பிணைக்கைதிகளை விடுவிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஹமாஸ் நிர்வாகத்தை பாலஸ்தீனின் சுதந்திரமான நிர்வாகத்திடம் ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். காசாவில் அமைதி திரும்ப உதவி செய்த அதிபர் டிரம்ப், அரபு, முஸ்லிம் நாடுகள், சர்வதேச நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று ஹமாஸ் கூறி உள்ளது.