உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இண்டி கூட்டணியை அலறவிடும் காங்கிரஸ் பார்முலா | Congress | AAP | Delhi Election

இண்டி கூட்டணியை அலறவிடும் காங்கிரஸ் பார்முலா | Congress | AAP | Delhi Election

டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்த உள்ள 70 தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 22ல் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. பாஜ 48 தொகுதிகளில் வென்று 26 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட ஆம் ஆத்மி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி, மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவின் சிவசேனா ஆம் ஆத்மி பக்கம் நின்றது. இவர்களில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆம் ஆத்மிக்காக டெல்லியில் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரச்சாரமும் செய்திருந்தார்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை