சமையல் கேஸ் சிலிண்டர், டீசலுக்கான கலால் வரி அதிகரிப்பு! Cooking Gas | Price Hiked | Hardeep Singh Pu
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டில்லியில் கூறியதாவது: சமையல் கேஸ் விலை, சிலிண்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 500 ரூபாயில் இருந்து, 550 ரூபாயாக உயர்கிறது. பொது பிரிவினருக்கு, 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக அதிகரிக்கிறது. இந்த விலை, உள்ளூர் வரி நிலவரத்துக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். சமையல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்பாக, 15 முதல் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியும் லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது சில்லரை விற்பனை விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. சமையல் கேஸ் சிலிண்டரில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள, 43,000 கோடி ரூபாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.