தூக்கம் தொலைத்த துரைப்பாக்கம்; அதிகாலையில் பரபரப்பு | Crime | Thuraipakkam Crime news | Police inves
சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் அருகே குமரன் குடில் பகுதியில் ரத்த கரையுடன் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் அந்த சூட்கேசை கண்ட அப்பகுதியினர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். துர்நாற்றத்துடன் சாலையோரம் கிடந்த சூட்கேசை போலீசார் திறந்து பார்த்தனர். பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொலை செய்த நோக்கம் குறித்து முதல் கட்ட விசாரணை நடந்தது. உடல் பாகங்களில் உள்ள அடையாளங்களை வைத்து அந்த பெண் மாதவரத்தை சேர்ந்த 31 வயது தீபா என்பது தெரிய வந்தது. 3 நாட்களுக்கு முன் தீபா காணாமல் போயிருந்த தகவலும் கிடைத்தது. தீபாவுக்கு திருமணமாகவில்லை. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சூட்கேஸ் மீட்கப்பட்ட இடம் அருகே வசித்து வரும் மணி என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சிவகங்கையை சேர்ந்தவர். தடயவியல் நிபுணர்கள் இவர் வீட்டில் சோதனை நடத்தினர்.