உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதுச்சேரியில் இடைவிடாமல் காற்றுடன் சுழற்றி அடிக்கும் மழை | Cyclone Fengal | Heavy rain | ECR | Floo

புதுச்சேரியில் இடைவிடாமல் காற்றுடன் சுழற்றி அடிக்கும் மழை | Cyclone Fengal | Heavy rain | ECR | Floo

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது. புதுச்சேரியிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது.நேரம் செல்ல செல்ல மழையின் வேகமும், காற்றின் வேகமும் அதிகரிக்கிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை - புதுச்சேரி முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு சின்ன காலப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் இல்லாமல் சாலை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் புதுச்சேரி - சென்னை மார்க்கமாக போக்குவரத்து வெகுவாக பாதித்துள்ளது. இசிஆர் சாலையில் தேங்கி உள்ள மழைநீர் சாலையோர கடைகள் உள்ளே புகுந்ததால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை